×

மூத்த புகைப்பட பத்திரிகையாளருமான சு.குமரேசன் மறைவு: அமைச்சர் சாமிநாதன் இரங்கல்!

சென்னை: விகடன் நிறுவனத்தின் முன்னாள் தலைமைப் புகைப்பட கலைஞரும் மூத்த புகைப்பட பத்திரிகையாளருமான சு.குமரேசன் மறைவுக்கு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்; தமிழ் இதழியலின் மூத்த புகைப்படக்காரர் சு.குமரேசன் (வயது 56) அவர்கள் இன்று (09.11.2023) அதிகாலை மாரடைப்பால் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகவும் மனவருத்தம் அடைந்தேன்.

சு.குமரேசன் அவர்கள் 30 ஆண்டுகள் விகடன் குழுமத்தில் தலைமைப் புகைப்படக்காரராகப் பணியாற்றி, அரசியல், சினிமா, விளையாட்டு, கலை, இலக்கியம் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் பல்வேறு நிகழ்வுகளைப் பதிவு செய்த அனுபவம் கொண்டவர். சு.குமரேசன் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், பத்திரிகைத் துறை நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். என்று பதிவிட்டுள்ளார்.

 

The post மூத்த புகைப்பட பத்திரிகையாளருமான சு.குமரேசன் மறைவு: அமைச்சர் சாமிநாதன் இரங்கல்! appeared first on Dinakaran.

Tags : S. Kumaresan ,Minister ,Saminathan ,Chennai ,Vikatan ,Dinakaran ,
× RELATED கடத்தூர் கிராமத்தை மதிப்பீடு செய்த...